இந்த ஆண்டுக்குள் தனியார் மயமாகிறது ஏர் இந்தியா நிறுவனம்

ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

ஏர் ஏசியா உள்ளிட்ட சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏர் இந்தியா யாருக்கு விற்கப்படும் என்பது ஜூன் மாத இறுதியில் தெரியவரும் என்றும், ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். மேலும், அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி அதனைத் தனியார் நிறுவனத்துக்கு விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. 41 சர்வதேச நகரங்களையும், உள்நாட்டில் 72 நகரங்களையும் இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கிறது. எனினும் ரூ.52,000 கோடிக்கும் அதிகமான அளவுக்குக் கடன் சுமை உள்ளதால், அந்த நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...