தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் அக்., 2-ம் தேதி தொடக்கம்

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். ஏழை, எளிய மக்களுக்காக நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார். 10 கோடி பேர் தலா 5 லட்சம் ரூபாய் அளவில் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இதற்காக ஒதுக்கப்படும் என நிதி ஆயோக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்துக்கு 1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை இதற்கான ப்ரீமியம் செலுத்த வேண்டியதிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...