சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது : மத்திய அரசு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்காடு மொழியாக தமிழை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீண்ட காலமாக எதிர்பார்ப்பு உள்ளது. இதனை வலியுறுத்தி கடந்த 2006-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சசிகலா புஷ்பா எம்.பி இது தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் இன்று எழுப்பினார். இதற்கு, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது :- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம் இருந்து 2006-ம் ஆண்டு கோரிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரையை ஏற்கமுடியாது என உச்சநீதிமன்றம் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11-10-2012 அன்று அறிவித்தது. கடந்த 1997 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் இதே போன்ற கோரிக்கை எழுந்த போது அதனை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...