பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வருகை

ஆரோவில் உதயதின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

ஆரோவில் உதயதின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வருகிறார். 

மனிதகுல ஒற்றுமைக்கு அடையாளச் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து மகான் அரவிந்தர் எழுத்துகளில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1966-ல் ஆரோவில் குறித்த திட்டம் யுனெஸ்கோ பொதுசபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 

அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால் 1967 பிப்ரவரி 28-ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. ஆரோவில் சர்வதேச நகரம் புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வரும் 28-ம் தேதி ஆரோவில் நகரம் 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட ஆரோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில், ஆரோவில் உதய தினாவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புதுச்சேரி வர உள்ளதாக புதுச்சேரி மாநில பா.ஜ.க., தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி புதுச்சேரி வருவது குறித்து பிரதமர் அலுவலகதில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...