தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

தினகரன் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. குமாரசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து பல மாவட்டங்களில் நீக்கப்பட்டு வருகின்றனர். இன்று திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் 175 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்களில் முன்னாள் எம்.பி. பி.குமாரசாமி (மாவட்ட துணை செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் இளம்வழுதி எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் பொன்னுதுரை, அழகுமலை, மாவட்ட மகளிர் அணி தலைவி தமிழரசி, சினாத் தேவர், வைகை பாலன், துரைராஜ், மதன்குமார் அழகுராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மேற்கண்டவர்கள் உள்பட 175 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...