பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்களின் கருத்து

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்தியா: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவை, பின்வருமாறு :

பிரதமர் மோடி கூறுகையில்,  பட்ஜெட் புதிய இந்தியாவை வலிமைபடுத்துவதாகவும், வளர்ச்சியை வேகப்படுத்துவதாகவும் உள்ளது. 125 கோடி மக்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. விளைபொருட்களை விற்பனை மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியதாவது : நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் ஜெட்லிக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஜெட்லியின் தோல்வி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். என்றார். 

மத்திய அமைச்சர் கட்கரி பேசியதாவது : 10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு மிகப்பெரிய திட்டம். வரலாற்று சாதனை மிக்க பட்ஜெட். இவ்வாறு கூறினார். 

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியதாவது : கல்வி, சுகாதாரம், விவசாயம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இதற்காக அரசை பாராட்டுகிறேன். எனக் கூறினார். 

மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா பேசுகையில்: விவசாயிகளை மேம்படுத்த நிதியமைச்சர் முயற்சி செய்துள்ளார். ஆனால், கிராமப்புற விவசாயிகளின் பிரச்னை பெரியது. என்றார். 

தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை கூறியதாவது: நாடு பொருளாதாரம் வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆரோக்கிய பட்ஜெட். விவசாயிகளுக்கு கடன் அட்டை கொடுப்பது போல், மீனவர்களுக்கு கடன் அட்டை கொடுக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது : 2019 தேர்தலை கொண்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயில் திட்டங்களை ஒரு வருடத்தில் நிறைவேற்ற முடியுமா? இது கார்ப்பரேட் அரசாங்கம். இந்த வருடம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?.. எனக் கேள்விகளை எழுப்பினார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...