விவசாயம், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்: அருண் ஜெட்லி

விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.

இந்தியா: விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார். 

நாடாளுமன்றத்தில் இன்று 2018-19 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:- விவசாயம், கிராமப்புற பொருளாதார மேம்பாடு, ஏழைகளுக்கான சுகாதாரம் போன்றவற்றுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயம் மற்றும் கிராமபுறத்தை மேம்படுத்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உற்பத்தி செலவிலிருந்து 1.5 சதவீத லாபம் கிடைக்க வழி செய்யப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். 

2018 - 19 ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.22 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. .மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்துதல் துறை ஒதுக்கீடு ரூ.1,400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1,290 கோடியில் தேசிய மூங்கில் கொள்கை உருவாக்கப்படும். விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம், காற்று மாசு கட்டுப்படுத்தப்படும். 



தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 2 கோடி புதிய கழிவறைகளைக் கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தில் 51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கல்வி தரத்தை மேம்படுத்த 13 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பழங்குடியின பகுதிகளில் நவோதயா பள்ளிகளின் தரத்திற்கு இணையாக மாதிரி பள்ளிகள் திறக்கப்படும். பி.டெக் மாணவர்கள் 1.000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும்.

குஜராத் மாநிலம் வதோதராவில் ரெயில்வே பல்கலைக்கழகம் திறக்க திட்டம். நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் அமைக்கப்படும். பழங்குடியின மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாசன வசதியில்லாத 96 மாவட்டங்களுக்கு நிலத்தடி நீர் வசதி ஏற்படுத்தி தர ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்திற்காக சுகாதாரத்துறைக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு திட்டம். இத்திட்டத்தில் 50 கோடி பேர் பயன்பெறுவர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை பெறுவார்கள். தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும். à®•ாசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 சிகிச்சைக்காக வழங்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். நாடு முழுவதும் 24 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி இருப்பது உறுதி செய்யப்படும்.  



கடந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 7.6 சதவிகிதம் அதிகமாக ரூ.2.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் சிசிடிவி பொருத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும். ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். 



18 ஆயிரம் கி.மீ. இரட்டை ரெயில்பாதைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரெயில் நிலையங்களில் நடைமேடைகளுக்கு பதிலாக எஸ்கலேட்டர் அமைக்கப்படும். பெரம்பூரில் அதிநவீன ரெயில்பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும். எல்லா ரெயில் நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். 3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில்பாதைகள் சீரமைக்கப்படும். 2019-க்குள் 4 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும். பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் சேவை ஏற்படுத்தப்படும். பணிமூட்டத்தால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு கருவிகள் அமைக்கப்படும். மும்பை மாநகர ரயில்வே வசதிகளுக்கு 11.000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...