2018 - 19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்

2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். 1மணி நேரம் 51 நிமிடம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்தார்.

இந்தியா: 2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். 1மணி நேரம் 51 நிமிடம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

  • விவசாயம், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்
  • முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு 
  • விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் 
  • விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ. 22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: 
  • அனைவருக்கும் வீடு திட்டத்தில் 51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
  • 2 கோடி புதிய கழிவறைகளைக் கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளது
  • டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்களை மேற்கொள்ளப்படும்
  • இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் 8 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்படும்
  • மீனவர்களுக்கு கிஷன் கடன் அட்டைகள் வழங்கப்படும்
  • மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்பில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி இல்லை
  • வருமானவரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவு சலுகையாக ரூ.40 ஆயிரம் அறிவிப்பு
  • வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும்:
  • மாத சம்பளதாரர்களுக்கு வருமானவரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டுவரப்படும்
  • தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
  • ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும்
  • தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது
  • கருப்புப் பண தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது
  • வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது
  • வருமானக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது
  • எம்.பி.க்களுக்கான படிகள் ஏப்ரலுக்கு பிறகு உயர்த்தப்படும்
  • பணவீக்கத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் 5 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்
  • ஆளுநரின் சம்பளம் மாதம் ரூ.3.5 லட்சமாக உயர்வு
  • குடியரசுத் தலைவரின் சம்பளம் மாதம் ரூ.5 லட்சமாகவும், துணைகுடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ.4 லட்சமாகவும் உயர்வு
  • 2 ராணுவ தளவாட உற்பத்தி முனையங்கள் ஏற்படுத்தப்படும்
  • நாட்டில் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போல தனி அடையாள அட்டை வழங்கப்படும்
  • கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
  • வரலாற்று சிறப்பு மிக்க 10 சுற்றுலா தலங்களை நாட்டின் அடையாளமாக மாற்றப்படும்
  • கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ.3,073 கோடி ஒதுக்கீடு
  • ஜவுளித்துறை வளர்ச்சிக்காக ரூ.7,148 கோடி ஒதுக்கீடு
  • எல்லா ரெயில் நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்• 
  • பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் சேவை ஏற்படுத்தப்படும்
  • பெரம்பூரில் அதிநவீன ரெயில்பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்
  • இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்குகளாக அதிகரிக்கப்படும்
  • 25 ஆயிரம் ரெயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்
  • ரெயில்வேத்துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி
  • சுற்றுலாதுறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை
  • நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த சர்வதேச எல்லைகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 99 நகரங்கள் தேர்வு; ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம்
  • புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது
  • மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்பில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி இல்லை
  • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன் இறக்குமதி வரி 15%லிருந்து 20% ஆக உயர்வு

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...