”விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்”

விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்தியா: விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் பேசியதாவது, நாங்கள் பதவியேற்ற போது நாடு ஊழலில் மூழ்கியிருந்தது. நிர்வாக சீர்கேட்டால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. வறுமையை ஒழிப்போம் என உறுதியளித்து இருந்தோம். எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தற்போது நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. வேகமாக வளரும் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம்.

அரசின் நடவடிக்கையால் நேரடி அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. வரி சீர்திருத்தங்களால் வரி செலுத்தும் முறை எளிதாகியுள்ளது. 2017 - 18-ம் ஆண்டில் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது. விரைவில் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா எட்டும். இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். வளர்ச்சிக்கு உற்பத்தி துறை முதுகெலும்பாக உள்ளது. கல்வியை மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பிரதமரின் கொள்கைகள் காரணமாக நாங்கள் சீர்திருத்தங்களை கொண்டு செல்கிறோம். நலிந்தோருக்கு உதவி செய்யும் பட்ஜெட்டாக இது இருக்கும். என்றார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...