இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், காஷ்யப் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜனவரி 31




இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், காஷ்யப் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் இன்று தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், டென்மார்க்கின் நடால்யா கோச் ரோடேவும் மோதினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிந்து முதல் சுற்றை 21-10 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் சிந்து 21-13 எனக் கைப்பற்றினார். இதன்மூலம், 21-10, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும், ஹாங்காங்கின் லீ சியூக் இயூவும் மோதினர். இப்போட்டியின், முதல் இரண்டு செட்களையும் 21-17, 21-18 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். இதன் மூலம் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான காஷ்யப், டென்மார்க்கின் ஹான்ஸ்-கிரிஸ்டெய்ன் விட்டின்கசை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-14, 21-18 என்ற நேர் செட்களில் காஷ்யப் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

இதுதவிர இந்திய வீராங்கனைகளாக சாய்னா நேவால், முக்தா அக்ரே, ஆகார்ஷி காஷ்யப், கட்டே ருத்விகா ஷிவானி மற்றும் இந்திய வீரர்களான சாய் பிரனீத், சித்தார்தா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...