உலக பாக்ஸ் ஆபிசில் ரூ. 200 கோடி வசூல் வேட்கையில் ’பத்மாவத்’

உலக பாக்ஸ் ஆபீசில் பத்மாவத் திரைப்படம் இந்த வார இறுதியில் ரூ. 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜனவரி 31

உலக பாக்ஸ் ஆபீசில் பத்மாவத் திரைப்படம் இந்த வார இறுதியில் ரூ. 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர், ஆகியோரது நடிப்பில் உருவான பத்மாவத் படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகியது. தற்போது, இந்தப் படம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் உலக அளவில் இதன் மொத்த வசூல் ரூ.162 கோடியை தாண்டி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் பத்மாவத் ரூ. 200 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வசூல் சிறப்பாக இருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற தீபிகாவிடம், பத்மாவத் படத்தில் உங்களை கவர்ந்த காட்சி எது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கில்ஜி - ராவல் இடையேயான சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி. இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது நானும் இருந்தேன். இரண்டு பெரிய ஸ்டார்கள் இதுபோன்று சண்டையிட்டது இல்லை. இருவரும் நிஜமாகவே ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சண்டையிடுவது போன்று இருந்தது.

படத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தும் கிடைத்திருக்கும் வெற்றி பெரிய விஷயம். இந்தப் படத்தை என் பெற்றோருக்கு பெங்களூரில் பிரத்யேகமாக திரையிட்டோம். அவர்கள் என் நடிப்பைப் பார்த்து மெய்மறந்தார்கள். மீண்டும் வரலாற்று கேரக்டரில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. இருந்தாலும் சினிமாவில் எதுவும் நடக்கலாம். என்னை பாதிக்கும் வரலாற்றுக் கதைகள் வந்தால் அதில் நடிப்பது பற்றி யோசிப்பேன், என்றார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...