சகோதரனின் கொலைக்கு நீதி கோரி 783 நாட்கள் நடத்திய இளைஞரின் உண்ணாவிரதம் வாபஸ்

சகோதரனின் கொலைக்கு நீதி கோரி 783 நாட்கள் நடத்திய இளைஞரின் உண்ணாவிரதம் வாபஸ்

ஜனவரி 31

கேரளாவில் தனது சகோதரர் சாவுக்கு நீதி கேட்டு, 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இளைஞர் வாபஸ் பெற்றார். 

அம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பாரசலா போலீஸ் நிலையத்தில், விசாரணைக் கைதியாக இருந்த ஸ்ரீஜீவ் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். எனினும், இதனை ஏற்க மறுத்த ஸ்ரீஜிவ்வின் சகோதரர் ஸ்ரீஜித் தனது சகோதரன் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.



மேலும், இதற்கான நீதி கேட்டு, கடந்த 2016 ஜனவரி 30ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். கேரள தலைமைச் செயலகம் முன்பாக, இந்தப் போராட்டத்தை தொடர்ந்த அவரிடம் யாரும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த நிலையில், பூஞ்சர் தொகுதி எம்.எல்.ஏ. ஜார்ஜ், ஸ்ரீஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்ப உள்ளதாகவும், உண்ணாவிரதத்தைக் கைவிடும்படியும் அவர் வலியுறுத்தினார். எனினும், சம்பந்தப்பட்ட போலீசார் தண்டிக்கப்படும் வரையிலும் போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என ஸ்ரீஜித் கூறினார். 

தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சகோதரரின் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டத்தைத் தொடர்ந்த ஸ்ரீஜித்துக்கு, கேரள மக்களும் ஆதரவு அளித்தனர். சமூக வலைதளங்களிலும் ஸ்ரீஜிவ்வின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும், மலையாள முன்னணி நடிகர்கள் நிவின் பாலி, டோவினோ தாமஸ், பார்வதி, பிருதிவிராஜ் உள்ளிட்ட பலரும் ஸ்ரீஜித்தின் போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதனிடையே, ஸ்ரீஜிவ்வின் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதனடிப்படையில், ஸ்ரீஜிவ்வின் மரணம் தொடர்பான வழக்கு சி.பி.ஐ. விசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 783 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஸ்ரீஜித் கைவிடுவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சகோதரனின் மரணம் தொடர்பான வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சி.பி.ஐ. வழக்கை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

463 நாட்களுக்கும் மேலாக, ஒருவர் நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்தும், உரிய நீதி கிடைக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளதென்று, கேரள மக்கள் கூறுகின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...