152 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முழு சந்திரகிரகணம் : பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம் என அறிவிப்பு

ஜனவரி 31

2018-ம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம், இம்மாதத்தின் 2 -ஆவது பெளர்ணமி தினமான இன்று நிகழ உள்ளது. இதனை எவ்வித பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது, நிலவின் மீது படும் சூரிய ஒளி பூமியால் தடுக்கப்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால், சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது. பூமியின் நிழலில் இருந்து சந்திரன் வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதுவே, சந்திர கிரகணமாகும். சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போதுதான் இது சாத்தியம் என்பதால் எப்போதும் பெளர்ணமி நாளில் தான் சந்திர கிரகணம் வரும்.

இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம், பெளர்ணமி நாளான இன்று வருகிறது. இந்த அரிய நிகழ்வு இந்தியா, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு கிரகணமாக தெரியும். அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் தொடக்கம் முதல் முடிவு வரை கிரகணத்தை பார்க்க முடியும். அதேசமயம், பிற வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் இதனை முழுமையாகப் பார்க்க முடியாது.

இந்தியாவில் இன்று மாலை 5.18 மணிக்கு பூமியின் நிழல், நிலவின் மேல் மெதுவாக விழத் தொடங்கும். இது பகுதி சந்திர கிரகணமாகும். மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை பூமியின் நிழல் நிலவை முழுவதுமாக மூடியிருக்கும். இதுவே, முழு சந்திர கிரகணம். இரவு 7.37 மணி முதல் பூமியின் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும், இரவு 9.38 மணிக்கு பிறகுதான் நிலவு அதன் முழு ஒளியுடன் 'சூப்பர் மூன்'னாக பிரகாசிக்கும்.

இந்தக் கிரகணத்துடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வு சூப்பர் மூன். நிலவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுவதே 'சூப்பர் மூன்' எனப்படுகிறது. சூரிய ஒளி ஏழு நிறங்களை உள்ளடக்கியது. இவற்றில் ஊதா, நீலம் போன்ற நிறங்கள் பூமியின் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டும் சந்திரனில் விழுகின்றன. எனவேதான், முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. 'ப்ளு மூன்' என்றதும் இந்நாளில் நிலவு நீல நிறமாக தோன்றுமா என்ற கேள்வி எழக்கூடும். உண்மையில் நிலவு நீல நிறமாக தோன்றாது. இதுவொரு பேச்சு வழக்கு. ஒரே மாதத்தில் இரு பெளர்ணமிகள் வந்தால், இரண்டாவதாக வரும் பெளர்ணமியின் போது தோன்றும் நிலவு பேச்சு வழக்கில் 'ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது.

சந்திரகிரகணத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள கோவில்களின் நடை மாலை அடைக்கப்படுகின்றன. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...