பழனி உள்பட முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலம்

ஜனவரி 31

தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, 3-ம் படை வீடான பழனியில் அரோகரா கோ‌ஷம் முழங்க தைப்பூச தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முருகப் பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபடுவதுதான். இந்த வருடத்துக்கான தைப்பூசத் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன் பிறகு சிறப்பு ஆராதனையும், கன்னிகாதானம், மாங்கல்ய பூஜை நடைபெற்றது.

பின்னர் இரவு 9.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.

7-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளினர். அங்கு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன்பிறகு காலை 10 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை சந்திரகிரகணம் என்பதால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக தேர்பவனி காலையில் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கினர். பின்னர், பக்தர்கள் திருத்தேரை இழுத்து வழிபட்டனர். திருத்தேர் நிலையை அடைந்தவுடன் தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் 4 ரத வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தபோது பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பினர். அவர்களின் சரண கோ‌ஷம் விண்ணைப்பிளக்கும் வகையில் இருந்தது.

இதேபோல,  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்தும் கோவிலுக்கு வந்தனர். 

இன்று மாலை 5.16 மணியில் இருந்து இரவு 8.50 மணி வரையிலும் சந்திரகிரகணம் ஏற்படுவதால், பூஜை காலங்கள் மாற்றப்பட்டு உள்ளது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளின் வழியாக வடக்குரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளிப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோவிலை சேர்கிறார்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடை அடைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து ராக்கால அபிஷேகம், ராக்கால தீபாராதனை, ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...