2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவர் தமிழிசை

தேசிய அளவில் 2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.

ஜனவரி 30

தேசிய அளவில் 2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. 

2017 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவருக்கான விருதை ர்வதேச மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. பல்வேறு பெண் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, பா.ஜ.கவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பலர் அவருக்குப் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவரான தமிழிசை சவுந்திரராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பெண் தலைவர் : 

தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பெண் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தேசிய அளவில் பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி ஏற்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா அம்மாநில பா.ஜ.க., தலைவராக ஏற்கெனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...