கர்நாடக முதலமைச்சரை சந்திக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி திட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாடு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 

டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், போதியளவு தண்ணீர் இல்லை எனக்கூறி, தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு கர்நாடக அரசின் தலைமை செயலர், முதன்மை செயலர் மூலம் தொலைபேசி மற்றும் கடிதம் வாயிலாக சித்தராமையாவுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன், சித்தராமையாவை சந்திக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...