காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்த பசுவின் பாசப்போராட்டம்

கர்நாடகாவில் காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தை விரட்டிய தாய் பசுவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.


கர்நாடகா: கர்நாடகாவில் காயம்பட்ட கன்றுவை ஏற்றிச்சென்ற வாகனத்தை விரட்டிய தாய் பசுவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. 



வடக்கு கர்நாடக மாநிலத்தில் ஹவேரி என்ற ஊரில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது பசுமாட்டை செல்லமாக வளர்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பசு, கன்று போட்டது. சமீபத்தில் கன்று விளையாடும்போது கீழே விழுந்து காயம்பட்டது. அதனால், கன்றுவால் எழுந்து நடக்க முடியவில்லை. கன்றுவின் வேதனையை விவசாயி மட்டுமல்ல தாய் பசுவும் பார்த்து துடித்தது. இதையடுத்து, விவசாயி கன்றுக்குட்டியை ஒரு மினி வேனில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

இதைப்பார்த்த தாய் பசுவும் வேனை பின் தொடர்ந்து ஓடியது. லாரி வேகமாக சென்றபோது பசுவும் வேகமாக ஓடியது. அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு மருத்துவமனை வரை  கூடவே சென்றது. இந்தக் காட்சியை சாலையில் சென்ற அனைவரும் பார்த்து நெகிழ்ந்துபோனார்கள். தாயின் இந்தப் பாசப்போராட்டம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...