புதிய இந்தியாவுக்கான முக்கிய ஆண்டாக 2018 இருக்கும்: குடியரசு தலைவர்

புதிய இந்தியா கனவு உண்மையாகும் முக்கிய ஆண்டாக 2018 இருக்கும் என நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

ஜனவரி 29

புதிய இந்தியா கனவு உண்மையாகும் முக்கிய ஆண்டாக 2018 இருக்கும் என நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

2018-2019 ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக,  நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொள்கிறார்.

குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் அவர் முதன்முறையாக உரையாற்றினார். நாடாளுமன்ற இருஅவைகளின் கூட்டு கூட்டத்தில் ராம்நாத் கோவிந்த் பேசுகையில், புதிய இந்தியா கனவு உண்மையாகும் முக்கிய ஆண்டாக 2018 இருக்கும். ஆதார் உதவியால் ஏழைகளுக்கான பலன்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களை சென்றடைகிறது. கிராமங்களில் பிராட்பேண்ட் இணைப்பினை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதுவரை 2.5 லட்சம் பஞ்சாயத்துகள் இந்த இணைப்பில் உள்ளன.

நாடு முழுவதும் 2.7 லட்சம் பொதுசேவை மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் குறைந்த விலைகளில் பல்வேறு சேவைகளுக்கான டிஜிட்டல் சேவையை வழங்கி வருகிறது. இது தொலைதூர பகுதிகளுக்கும் சென்று அடைகிறது. இஸ்லாமிய பெண்கள் கண்ணியமிக்க முறையில் மற்றும் அச்சமற்ற முறையில் வாழ்வதற்கு வழி செய்யும் முத்தலாக் மசோதா நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டில் 56 சதவீத கிராமங்கள் சாலைகளுடன் இணைக்கப்பட்டு இருந்தன. ஆனால், 82 சதவீத கிராமங்கள் இன்று சாலைகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் உள்ளடங்கிய தொலைதூரப் பகுதிகளும் அடங்கும். 2019-ம் ஆண்டிற்குள் அனைத்து கிராமங்களையும் கிராமப்புற சாலைகளுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற 2019-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு தினத்தினை நாம் கொண்டாடும்பொழுது, நமது நாடு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது என்ற நிலையை உருவாக்கி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமை ஆகும்.

ஒரே முயற்சியில் 140 செயற்கைக்கோள்களை இஸ்ரோ அமைப்பு அனுப்பி சாதனை படைத்துள்ளது. டிஜிட்டல் வழியேயான பணபரிவர்த்தனையால் தவறான நபர்களுக்குச் செல்ல இருந்த ரூ.57 ஆயிரம் கோடி தடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...