பத்ம விருதுபெற்ற இளையராஜாவின் புகழை சர்ச்சைக்குரிய தலைப்பில் செய்தி வெளியிட்ட நாளிதழ் : வறுத்தெடுக்கும் நெட்டின்சன்கள்

இசைஞானி இளையராஜா பத்ம விருது வாங்கியதை சர்ச்சைக்குரிய வகையில் தலைப்பிட்டதால், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஜனவரி 26

இசைஞானி இளையராஜா பத்ம விருது வாங்கியதை சர்ச்சைக்குரிய வகையில் தலைப்பிட்டதால், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

எவர்கிரீன் என அழைக்கப்படும் இளையராஜா சுமார் ஆயிரம் படங்களுக்கு இசைமைத்துள்ளார். மேலும், பல பாடல்களையும் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் மராத்தி, சமஸ்கிருதம் மற்றும் பஞ்சாபி போன்ற மொழிப் படங்களுக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்துள்ளார். 

கடந்த 2003-ம் ஆண்டு 155 நாடுகளில் சர்வதேச அளவிலான சிறந்த பாடலுக்கான கருத்துக்கணிப்பை பிபிசி நடத்தியது. இதில், 1991-ம் ஆண்டு இளையராஜாவின் இசையில் வெளியான தளபதி படத்தின் பாடலான, ’ராக்கம்மா கையத் தட்டு’ பாடல் முதல் 10 இடங்களுக்குள் பிடித்தது. இதற்காகக் கடந்த 2010 ஆம் ஆண்டு இசைஞானிக்குப் பத்ம பூஷன் விருதை வழங்கி மத்திய அரசு கவுரப்படுத்தியது. 

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இசைத் துறை சாதனைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாட்டின் 2-வது உயரிய விருதைப் பெற்றது தொடர்பாக இளையராஜா கூறுகையில், மத்திய அரசு என்னை கவுரவிப்பதாக நினைக்கவில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்திருப்பதாக கருதுகிறேன். என்றார். 



பத்மவிபூசன் விருதை வழங்கி மத்திய அரசு தமிழனை பெருமைப் படுத்தியுள்ள நிலையில், பிரபல நாளிதழ் ஒன்று இளையராஜா விருது பெற்றதை, சாதியுடன் இணைத்து தலைப்பு வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள் சிக்கிக்கொண்டது. இதனைக் கண்டித்து நெட்டின்சன்கள் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, 1000-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய நாட்டின் முன்னணி இசைக்கலைஞரை, சாதி, மதத்தைக் கொண்டு பேசுவது ஏன்..? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது போன்ற தலைப்புகளை இட்டு, அவர் பெற்ற விருதுக்கான தன்மையை இழக்க செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 



இதுபோன்ற பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் நெட்டின்சன்கள் பதிவிட்டு வருகின்றனர். இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருபவர்களுடன், சிம்ப்ளிசிட்டி செய்தி நிறுவனம் சமூக வலைதளத்தில் கலந்துரையாடலை நடத்தியது. 

அப்போது, ”இசைத்துறையில் தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் இளையராஜாவை, தலித் எனக் கூறி வேறுபடுத்துவது கேவலமானது” . இவ்வாறு குமுதா என்பவர் கருத்து கூறியுள்ளார். 

இதேபோல, ”தலீத்துகளை அவமானப்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், இளையராஜாவும் பலிகடா ஆகியுள்ளார்”. தலீத் சமூக ஆர்வலர் கதிர் தெரிவித்தார். 

இசைஞானி இளையராஜா பத்ம விருது வாங்கியதை சர்ச்சைக்குரிய வகையில் தலைப்பிட்டதால், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...