தமிழகத்தில் 150 திரையரங்குகளில் பத்மாவத் திரைப்படம் வெளியீடு: திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

வடமாநிலங்களில் கடும் எதிர்ப்புகளுக்குள்ளான பத்மாவத் திரைப்படம், தமிழகத்தில் 150 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திரைங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜனவரி 25

வடமாநிலங்களில் கடும் எதிர்ப்புகளுக்குள்ளான பத்மாவத் திரைப்படம், தமிழகத்தில் 150 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திரைங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘பத்மாவத்’. ராஜபுத்திர ராணி பத்மாவதியை இழிவுப்படுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறி பல்வேறு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பெயர் மாற்றம், பல்வேறு காட்சிகள் நீக்கத்திற்குப் பிறகு, படத்தை திரையிட உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்துக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தீவைப்பு, தியேட்டர்கள் சூறை, வாகனங்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆனால், தென்மாநிலங்களில் இந்தப் படத்துக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை, தமிழகத்தில் பத்மாவத் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இந்தப் படம் மொத்தம் 145 திரையரங்குகளில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இது 150 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தற்போது 24 திரையரங்குகளில் பத்மாவத் படம் திரையிடப்படுகிறது. வட மாநிலங்களில் எதிர்ப்பு இருப்பதால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்தப் படத்தை திரையிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பு இல்லாததால், சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் இந்தப் படம் திரையிடப்படுகிறது. இருப்பினும், இந்தப் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘பத்மாவத்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இது 3டி, 2டி, ஐனாக்ஸ் 3டி என்ற மூன்று தொழில்நுட்பத்தில் வெளியாகி இருக்கிறது. பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்தப் படத்தை 3டி, ஐநாக்ஸ் 3டி தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது பிரமிக்கும் வகையில் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு வெளியாகி இருக்கும் ‘பத்மாவத்’ படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் அரவிந்த்சாமி ஆவேசம்:

பத்மாவத் திரைப்படத்துக்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு  நடிகர் அரவிந்த்சாமி, கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள். ஒன்று நாட்டு மக்களுக்கும் அவர்கள் உடைமைகளுக்கும் பாதுகாப்பு தாருங்கள். உங்களால் முடியவில்லை என்றால், அதற்கு எந்த சாக்குபோக்கும் சொல்லாதீர்கள். உங்கள் நிர்வாக சீர்கேட்டைத் தவிர இங்கே குறை சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...