தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும்: வைரமுத்து

தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

ஜனவரி 24

தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். 

சென்னையில் தமிழ், சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

ஆனால், விழா நிறைவில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றவர்களுடன் சேர்ந்து எழுந்து நின்று மரியாதை செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை’ என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆண்டாள் விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடர்பான கருத்தை வைரமுத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...