செல்பி மோகத்தால் உயிரை பணையம் வைத்த இளைஞர் : அதிர்ச்சி வீடியோ

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவதற்காகவும், அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலர் அபாயகரமான வகையில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர்.

ஜனவரி 24

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவதற்காகவும், அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலர் அபாயகரமான வகையில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர். 



ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரயில் முன் நின்று செல்பி எடுத்துக் கொள்வதற்காக பலர் காயமடைந்தும், உயிரை விட்டும் உள்ள சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார். இதில் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் வெளியிட்ட செல்பி வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று காஷ்மீரிலும் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு இருப்பது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தண்டவாளத்தின் நடுவே அவர் படுத்திருப்பதும், அவரின் மீது ரயில் வேகமாகக் கடந்து செல்வதாகவும் அந்த வீடியோ உள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக நண்பர்களிடம் சொல்லி இதுபோன்ற அபாயகரமான வீடியோவை அந்த இளைஞர் எடுக்கச் சொல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. 

இது போன்ற முட்டாள் தனமான செயல்களுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...