மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிப்பு

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஜனவரி 24

மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கிலும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சராக இருந்த போது 1992-93-ம் ஆண்டுகளில் ரூ.33.67 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 76 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே மரணமடைந்து விட்டனர். 3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். மீதமுள்ள 56 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

மாட்டு தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது 6 வழக்குகள் போடப்பட்டன. இதில், ஏற்கனவே 2 வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத் தலைமையிலான அமர்வு இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

தண்டனை விவரம் பிற்பகல் 2 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது. மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிரான முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3வது வழக்கிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...