”பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும்”

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை (BUS PASS) தொடர்ந்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 23

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை (BUS PASS) தொடர்ந்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :- பேருந்து கட்டணம் அதிகரித்த போதும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் பேருந்து பயண அட்டை வழங்கப்படும். இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

498 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டண பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயண அட்டைகள் வழங்குவதற்காகப் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 540.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...