தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் : சட்டப்பேரவை செயலாளரிடம் எம்.எல்.ஏ. தினகரன் கடிதம்

எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்வு தொடர்பாக அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார்.

ஜனவரி 23

எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்வு தொடர்பாக அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார். 

பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஊதியம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் வலியுறுத்தினர். குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டபேரவையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. 

இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் கொடுத்துள்ளார். மேலும், தமிழக அரசில் நிதி பிரச்சினை நிலவும் நிலையில், ஊதிய உயர்வு தேவையற்றது என கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...