பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்

பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் (73) சென்னையில் நேற்று (ஜன. 22) காலமானார்.

பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் (73) சென்னையில் நேற்று (ஜன. 22) காலமானார்.

இலங்கையைச் சேர்ந்த ஏ.இ.மனோகரன் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகரும், திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிகளில் இவர் பாடல்களை பாடி மக்களின் மனதை வென்றுள்ளார். பாப் இசைச் சக்கரவர்த்தி என்றும் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

சுராங்கனி.. சுராங்கனி எனும் பாடலைப் பாடியதன் மூலம் இவர் இசை உலகில் பிரபலமானார். அந்தப் பாடலை இந்தி உட்பட 8 மொழிகளில் பின்னர் பாடினார். மக்களின் ஆதரவைத் தொடர்ந்து கொங்கனி மொழியிலும் இந்தப் பாடல் பாடப்பட்டது. தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார்.

தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...