அரசியலில் தீவிரம் காட்டும் கமல் : 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை

தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார்.

ஜனவரி 23

தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார். 

நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமல் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை மாவட்டங்களில் உள்ள நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக 27 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமலஹாசன் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின் போது, தனது சுற்றுப்பயண விவரங்கள் தொடர்பாக திட்டம் வகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு அரசியலில் தீவிரம் காட்டும் நடிகர் கமலஹாசன், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...