சாமானியர்கள் வென்ற புரட்சி "ஜல்லிக்கட்டு": நடிகர் கமலஹாசன் புகழாரம்

"சாமானியர்கள் வென்ற புரட்சி ஜல்லிக்கட்டு" என ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா குறித்து நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனவரி 23

"சாமானியர்கள் வென்ற புரட்சி ஜல்லிக்கட்டு" என ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா குறித்து நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்ற தடை விதித்ததால் இளைஞர்கள் ஒன்று திரண்டு மெரீனா கடற்கரையில் கூடி அமைதி போராட்டம் நடத்தினார்கள். பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் ஜனவரி 8-ந் தேதி தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இறுதியில், ஜல்லிக்கட்டு நடத்த தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 23-ந் தேதி போராட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதலாம் ஆண்டு வெற்றி தினம் ஆகும். இதையொட்டி, நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:- ”இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா. தமிழனின் தளரா மனமும், அயரா தன்மையும் கண்ட வெற்றி, வாழ்க நற்றமிழர்.” இவ்வாறு, கமலஹாசன் தெரிவித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...