”நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்”

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ரசிகர்மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.

ஜனவரி 22

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ரசிகர்மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின் நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று கமல் சந்தித்துப் பேசினார். அப்போது சுற்றுப்பயண ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். பிப்ரவரி 10-ந் தேதி கமலஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக அங்கு செல்கிறார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் கமலின் சுற்றுப்பயண விவரம் முழுமையாக அறிவிக்கப்படுகிறது.

காலை 11 மணிக்குத் துவங்கிய ஆலோசனை மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது. அந்த ஆலோசனையின் முடிவில், தனது அரசியல் பிரவேசத்திற்கு வலுசேர்க்கும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல் முடிவு செய்துள்ளதாக, மதுரை மாவட்ட நற்பணி மன்றத் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் நடிகர் கமலஹாசன் அதற்கு  மறுப்பு தெரிவித்தார்.

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின் நடிகர் கமலஹாசன் கூறினார். 35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள். இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் எனக் கூறினார். அடுத்த மாதம் 24-ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக வந்த செய்தி தவறானது. 21, 22 மற்றும் 23-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மட்டுமே மேற்கொள்கிறேன். பொதுக்கூட்டம் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். நற்பணி இயக்கத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த வேண்டிய நேரம், கடமை வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...