பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்

அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 22

அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

அண்மையில் தமிழக அரசு பேருந்துகளின் பயணக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸின் மனுவை வழக்காக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

அவரது மனுவில், தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கட்டண உயர்வுக்கு மற்ற மாநிலங்களைக் காரணமாக சொல்லாமல் தமிழக மக்களுக்கு இதில் என்ன நன்மை என்பதை பார்க்க வேண்டும் என்று மக்கள் கொந்தளிக்கின்றனர். எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதி சுப்பையா, மனுவை வழக்காக தாக்கல் செய்தால் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டம்:

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, இன்று தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...