அரசு பேருந்து கட்டணம் உயர்வை திரும்பப் பெற முடியாது: போக்குவரத்து துறை அமைச்சர்

தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி பேருந்து கட்டண உயர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனவரி 20

தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி பேருந்து கட்டண உயர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிதிச்சுமை காரணமாகவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. 2000 ம் ஆண்டிற்கு பிறகு ஆந்திராவில் 16 முறையும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 6 முறையும் பேருந்துகட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2 முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. நவீன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

கட்டணத்தை உயர்த்தியும் போக்குவரத்து துறைக்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 200 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. போக்குவரத்து துறைக்கு ரூ.1 வரவு வந்தால் ரூ.1.42 கோடி செலவு ஏற்படுகிறது. சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றால் ரூ.417 கோடி செலவு ஏற்படுகிறது. இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. 

போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிகப்படியாக ரூ.1,000 கோடி அளவிற்கு ஊதிய உயர்வு அளித்துள்ளோம். பேருந்துகட்டண உயர்வு தொடர்பான அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். எனினும் தற்போதைய நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது. பல்வேறு காரணங்களால் போக்குவரத்து துறையின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...