மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனவரி 18

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அகரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்ககோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் இந்த ஊர்கள் இடம்பெறவில்லை எனக் கூறினார். இதனைத்தொடர்ந்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதனையடுத்து, 2018-ல் அரசாணை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு நடத்தியது தவறு இல்லையா..?. இது சட்டவிரோதம் ஆகாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக விளக்கம் அரசு தரப்பில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில், 2018-ல் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஜன.,12 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...