கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிக்கரமாக பரிசோதித்தது.

ஜனவரி 18

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிக்கரமாக பரிசோதித்தது.

அக்னி-5 ஏவுகணை ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று காலை 9.53 மணிக்கு வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. அக்னி-5 ஏவுகணை 5,000 கி.மீ. தூரம் வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது. அணு ஆயுதத்தை சுமந்து சென்று எதிரிகளின் இடத்தைத் தாக்கக்கூடிய வல்லமை படைத்தது. அக்னி-5 ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் தாண்டி 5 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும்.

துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிப்படுவதை விட வேகமாகப் பயணிக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை. அதனால் இதனை வழிமறித்து தாக்குவதும், ரேடார் மூலம் கண்டறிவதும் கடினம். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வைத்திருக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

பிரதமர் உத்தரவிட்டால் மட்டுமே அக்னி 5 ஏவுகணையை ஏவ முடியும் என்ற விதி உள்ளது. நான்காவது அக்னி-5 சோதனை கடந்த டிசம்பர் 26, 2016 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...