திட்டமிட்டபடி 25-ம் தேதி ரிலீஸாகிறது ”பத்மாவத்”: 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ”பத்மாவத்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.

ஜனவரி 18

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ”பத்மாவத்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்மாவத் (பத்மாவதி). சித்தூர் மகாராணி பத்மாவதி வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்திற்கு ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர், சென்சாரின் தலையீட்டுக்கு பின்னர் படம் பத்மாவத் என்ற பெயர் மாற்றத்துடன் வருகிற 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால், படத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பின. இதனால், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இப்படத்திற்கு தடை விதித்தன.

இதை எதிர்த்து, தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதோடு, பிற மாநிலங்களும் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் திட்டமிட்டபடி இப்படம் வரும் 25-ம் தேதி நாடு முழுவதும ரிலீஸாகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...