திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 18

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேகாலயா சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதம் 6-ம் தேதியுடனும், நாகாலாந்து சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மார்ச் 13 ம் தேதியுடனும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் 14-ம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்தது. தேர்தல் ஆணையர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவித்தார். அவர் கூறியதாவது, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும் நடக்கும். 3 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...