நீட் தேர்வு கேள்விகள் மாநிலப் பாடத்திட்டத்தையும் பரிசீலித்து தயாரிக்க மத்திய அரசு முடிவு

மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனவரி 18

மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான தகுதி நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்திள்ளது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேசிய தகுதி நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள் இடம் பெற்றிருப்பதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களால்கூட, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. தற்போது வரை நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

பல மாநிலங்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத்திட்டங்களில் வேறுபாடுகள் உள்ளன. இதனால் மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனைப் போக்க மாநில பாடத்திட்டங்களையும் நீட் கேள்வித்தாளில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நீட் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மனித வள அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கும்போது, அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் கணக்கில் கொள்ளவிருப்பதால் இனி மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்குப் பின்னடைவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் இந்தத் திட்டத்தினால் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைய வாய்ப்பு உள்ளது. 

ஆனால், மாநில பாடத்திட்டங்களை வைத்து கேள்வித்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக கேள்வித்தாளை மத்திய அரசு தயாரிக்கப்போகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...