ஜம்மூ - காஷ்மீர் எல்லையில் தமிழக வீரர் வீரமரணம் - பதிலடியில் 4 பாக்., வீரர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

ஜனவரி 18

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் மற்றும் கிராமமக்கள் படுகாயமடைந்தனர். 

இந்நிலையில், வீரமரணம் அடைந்தவர் பிஎஸ்எப் 78-வது பட்டாலியனில் பணிபுரிந்த தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பண்டார செட்டிபட்டியை சேர்ந்த ஏ.சுரேஷ் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 1976 ல் பிறந்த அவர், 1995ல் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். அவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவரது உடல் ராணுவ நடைமுறைகளுக்குப் பிறகு தமிழகம் கொண்டு வரப்பட இருக்கிறது. 

இதைத்தொடர்ந்து, அத்துமீறலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் நிலைகளை நோக்கி கடுமையாக தாக்கத் துவங்கினர். இதில் 3 முதல் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 நிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக பிஎஸ்எப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சியால்கோட் பகுதியில் பலத்தசேதம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...