2016-ம் ஆண்டு டிச.,04 தேதி மாலையே ஜெயலலிதா இறந்துவிட்டார் : சசிகலா சகோதரர் பகீர் தகவல்

2016 டிசம்பர் 04-ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 17

2016 டிசம்பர் 04-ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும் போது கூறியதாவது:- 2016 டிசம்பர் 4-ந்தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பால் ஜெயலலிதா இறந்து விட்டார். 4-ந்தேதி இரவே நான் அங்கு சென்றேன். ஜெயலலிதா மரணத்தை ஏன் அறிவிக்கவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ரெட்டி எங்கள் மருத்துவமனையின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் எனக் கேட்டார்.  மருத்துவமனையின் பாதுகாப்புக்காக ஒருநாள் தாமதமாக ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், தற்போது, சசிகலாவின் சகோதரர் திவாகரன் அளித்த தகவல் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...