சட்டப்பேரவைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்ளுவேன் : நடிகர் ரஜினிகாந்த்

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஜனவரி 17

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது டுவிட்டர் மூலமாகப் பதிவிட்டு வந்த நடிகர் கமல்ஹாசன் சமூக பிரச்சினைகளையும் அலசினார். இந்த நிலையில், பிப்ரவரி 21-ம் தேதி அரசியல் கட்சிப் பெயரை இருப்பதாகவும், ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். 

ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ள அவர், சுற்றுப்பயணம் செய்யும் ஊர்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி கணக்கெடுக்கவும் ரசிகர்களுக்கு நடிகர் கமல் உத்தரவிட்டுள்ளார். சுற்றுப்பயணத்தின்போது, அந்தப் பிரச்சினைகள் பற்றி பொதுமக்களோடு கலந்து ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ”இருவரும் இனைந்து செயல்படுவோமா என்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும். 6 மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்தாலும் அதை நிச்சயம் எதிர்கொள்ளுவேன்”  எனக் கூறினார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...