தனிக்கட்சித் தொடங்கும் முடிவில் ரஜினிக்கு குழப்பம்: உளவுத்துறை அறிக்கை

அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு காரணங்களால் தனிக்கட்சித் தொடங்குவது குறித்த தனது முடிவில் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 17

அரசியலில் களமிறங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு காரணங்களால் தனிக்கட்சித் தொடங்குவது குறித்த தனது முடிவில் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிக் கட்சித் துவங்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினியின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உளவுத் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அத்துறையினர் தகவல்களை சேகரித்து அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ரசிகர்களோடு படம் எடுத்துக் கொள்வதாக ரஜினி அறிவித்ததும், எழுச்சியோடு சென்னைக்கு ரசிகர்கள் திரண்டு வந்தனர். அதை வைத்து ரஜினி தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்தார். ரசிகர்கள் உற்சாகமாயினர். எப்படி அமைப்புகளை துவங்கி, கட்சியை துவங்குவது எனப் புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கட்சித் துவங்கப் போவதாக அறிவித்ததும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் பலரும், தன்னைத் தேடி வருவர் என ரஜினி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரபலமான களப்பணியில் தேர்ந்த அனுபவம் உள்ள யாருமே, ரஜினி தரப்பை அணுகவில்லை. இதனால், ரஜினி தரப்பு உற்சாகம் குன்றி உள்ளது.

தேடி வரும் அனுபவஸ்தர்களை வைத்து கட்சி கட்டமைப்புகளை எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம் என கணக்குப் போட்ட ரஜினியின் எண்ணம் பொய்த்துப் போனதால், அப்செட் ஆகி உள்ளனர். ரஜினி தரப்பினரை அணுகிய சில திராவிட இயக்கத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், அவர்களை அனுமதிக்க ரஜினி விருப்பப்படவில்லை. ரஜினி தரப்பைத் தேடிச் சென்ற அவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

கட்சி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பண பலம் உள்ள ரசிகர்மன்ற ஆட்கள் பெரிய அளவில் இல்லாதது யோசிக்க வைத்திருக்கிறது. கட்சித் துவங்குவதாக அறிவித்த பின்பும், நடிகர் கமல்ஹாசனும் கட்சித் துவங்கப் போவதாகவும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் துவங்கப் போவதாகவும் அறிவித்து இருப்பதும், ரஜினி தரப்பை ஏகத்துக்கும் குழப்பி இருக்கிறது.

ரஜினியும், கமலும் கட்சித் துவங்கினால் திராவிட இயக்கத்தின் மேல் அதிருப்தியில் இருக்கும் வாக்குகளில் பிளவு ஏற்படும் என ரஜினி தரப்பு அச்சப்படுகிறது. அதனால், ரஜினியோடு கமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...