தினகரனும், கமலும் தனிக்கட்சி ஆரம்பித்தால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை: முதலமைச்சர்

தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 17

தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள à®….தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அப்போது, அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க என்று கோஷமிட்டனர். பின்னர் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். அதனைத்தொடர்ந்து விபத்தால் பாதிக்கப்பட்ட 2 தொண்டர்கள் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நிதியுதவி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-  பிரதமர் நேரம் ஒதுக்கிய பின்பு சென்னையில் பிரம்மாண்டமான எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், à®….தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஹஜ் மானியம் ரத்து தொடர்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்படும். என்றார். 

”காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்தால் வலியுறுத்துவேன்” என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...