சாதி மறந்து காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்கக் கூடாது : உச்சநீதிமன்றம்

சாதி மறந்து காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்கக் கூடாது என்றும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி 16

சாதி மறந்து காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்கக் கூடாது என்றும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு முன்பு வடமாநிலங்களில் அதிகரித்து வரும் கட்டப் பஞ்சாயத்துக்கள் தொடர்பான வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 'இரு வேறு சாதியினருக்கு இடையே நடக்கும் திருமணத்துக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்களை மத்திய அரசு தடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வயது வந்த ஆணும், பெண்ணும் காதல் திருமணம் செய்வதை தடுப்பது சட்டவிரோதம். சாதி மறந்து காதல் திருமணம் செய்வதை தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சமூகம் என யாருக்கும் கிடையாது' என்று நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...