சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை: ப. சிதம்பரம் ஆவேசம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 13

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் விசாரிக்க முடியாது. சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. சோதனை நடைபெறும் என நேற்றே எதிர்பார்த்தேன். இந்த வழக்கில் இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. 

தில்லியில் உள்ள எனது வீட்டில் தேவையில்லாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு கார்த்தி வசிக்கவில்லை. சென்னை, தில்லி வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. படுக்கையறை, சமையலறையில் சோதனை நடத்தினர். இதுவரை 3 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம். நாடாளுமன்றத்தில் நான் அளித்த விளக்கம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...