கோவையில் ஏர்போர்ட்டை போன்று பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசு அனுமதி: முதலமைச்சர்

சேலத்தில் இருப்பதைப் போன்று கோவை, மதுரையிலும் பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜனவரி 13

சேலத்தில் இருப்பதைப் போன்று கோவை, மதுரையிலும் பஸ்போர்ட் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம்-பெங்களூரு சாலையில் இரும்பாலை சந்திப்பில் ரூ.21.97 கோடிமதிப்பில் புதிய மேம்பால பணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் ரூ.103.28 கோடியில் புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், போக்குவரத்து நெரிசல் இல்லா நகரமாக சேலம் மாநகர் உருவாக்கப்படும். சேலம் மாவட்டத்தில் பல மேம்பாலங்கள் அமைக்க உத்தரவிட்டவர் ஜெயலலிதா. சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அனுமதி அளித்துள்ளார். சேலத்தைப் போன்று மதுரை, கோவையிலும் ஏர்போர்ட்டை போலவே பஸ்போர்ட் அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சேலத்தில் விமான நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...