தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு

2017-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழகஅரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 12

2017-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழகஅரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருவள்ளுவர் விருது - முனைவர் கோ.பெரியண்ணன்

தந்தை பெரியார் விருது - பா.வளர்மதி

அண்ணல் அம்பேத்கர் விருது - டாக்டர் ஜார்ஜ் கே.ஜே

பேரறிஞர் அண்ணா விருது - அ சுப்பிரமணியன்

பெருந்தலைவர் காமராஜர் விருது - தா.ரா தினகரன்

மகாகவி பாரதியார் விருது - முனைவர் சு பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன்

பாவேந்தர் பாரதிதாசன் விருது - கே ஜீவபாரதி

தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது - எழுத்தாளர் பாலகுமாரன்

கி.ஆ.பெ விசுவநாதம் விருது - முனைவர் மருதநாயகம்

மேற்காணும் விருதுகள் வரும் 16-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில்  நடக்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார். 

விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இவ்விழாவில் வயதான தமிழறிஞர்கள் 50 பேருக்கு மாதந்தோறும் ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 வழங்குவதற்கான அரசாணை வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...