சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றம்

ஜனவரி 12

ஆளுநர் உரையுடன் கடந்த திங்களன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டி.டி.வி தினகரன் முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான அறிக்கை, தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஆகிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். மேலும், துணை நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். இதில், போக்குவரத்துத்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதியத்தை 100 சதவிகிதம் உயர்த்தும் மசோதா, மேயர் மற்றும் நகரசபை தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வழி செய்யும் மசோதா, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு சிறப்பு பதவி நீட்டிப்பு மசோதா ஆகியவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வை ஏற்க மாட்டோம் என்று கூறி தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மீண்டும் தேதி குறிப்பிடாமல் இந்தக் கூட்டத்தொடரை சபாநாயகர் முடித்துவைத்து அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...