குட்கா தொடர்பான வழக்கு : சசிகலா அறையில் கடிதம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல்

குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஜனவரி 12

குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

குட்கா விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், குட்கா தொடர்பாக தாங்கள் அனுப்பிய ரகசிய கடிதம் போயஸ் கார்டனில் சசிகலா அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் டிஜிபி எழுதிய ரகசிய கடிதம் கைப்பற்றப்பட்டது. சசிகலா அறையில் சிக்கிய கடிதம் குறித்து வருமான வரித்துறை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கமளித்துள்ளது. வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தை முதலமைச்சருக்கு டிஜிபி அசோக்குமார் அனுப்பியுள்ளார். முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம் போயஸ் இல்லத்தில் சசிகலா அறையில் இருந்தது.

2016 ஏப்., 1 முதல் ஜூன் 15 வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் வாக்குமூலம் அளித்ததாக பதில் மனுவில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. வருமானவரித் துறையினரின் பதில் மனுவை அடுத்து, வழக்கை வரும் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...