ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு

விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஜனவரி 12

விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பள்ளிப்பட்டு, கானகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார். மேலும், ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். 

எதிர்கட்சி எம்எல்ஏவின் இந்தக் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 கோடியே 52 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போது, 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை அப்போது வெளி மார்க்கெட்டில் குறைவாக இருந்தது.

ஆனால், இப்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசு மானியமும் இப்போது நிறுத்தி விட்டனர். எனவே, ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு விநியோகம் செய்ய இயலாது. துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. மானியத்தை ஈடுகட்ட அரசுக்கு மாதத்திற்கு ரூ.207 கோடி செலவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...