உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என நீதிபதிகள் கருத்து : சட்ட அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என்றும், தங்களது கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்பியதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக பேட்டி அளித்தனர்.

ஜனவரி 12

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என்றும், தங்களது கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்பியதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர். நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையொட்டி உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வழக்கு விசாரணையை முடித்துக் கொண்டுள்ளன.

நீதிபதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. சில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். உச்சநீதிமன்றத்தைப் பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு கொண்டு சென்ற சில விவகாரங்கள், நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. நீதித்துறைக்கு எங்களைப்போன்ற மூத்த நீதிபதிகளே பொறுப்பானவர்கள் என்பது எங்கள் கருத்து. 

நாங்கள் கொடுத்த கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்குக் கொடுக்கிறோம். அந்தக் கடிதத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. எங்களுக்காக மட்டுமே நாங்கள் இப்போது பேசினோம் என உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தைப் பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இதில், நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலிஜியம் முறையை கடுமையாக எதிர்த்து வருபவராவார். 

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகிள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...