நாட்டின் 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ

இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 12

இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான 30 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதில் 710 கிலோ எடைகொண்ட கார்ட்டோ சாட் -2 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. 

இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தியது. இது இஸ்ரோ அனுப்பும் 100-வது செயற்கைகோளாகும். தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த கர்ட்டோ சாட் -2 செயற்கைகோள் ஆகும். வெளிநாட்டைச்சேர்ந்த 28 செயற்கைகோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 28 செயற்கைகோள்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பின்லாந்து, கொரியா, பிரான்சு ஆகிய நாடுகளை சேர்ந்தவை ஆகும். 

2.21 மணி நேரத்தில் 505 கி.மீ. உயரத்தில் புவி வட்ட பாதையில் கார்ட்டோ சாட் -2 செயற்கைகோள் நிலைநிறுத்தப்படும். கார்ட்டோ சாட் -2 செயற்கை கோளின் எடை 710 கிலோ ஆகும். இந்த செயற்கைகோள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு உதவும். மொத்தம் 1,323 கிலோ எடையுள்ள 31 செயற்கைகோள்களுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முந்திய கிரண்குமாரின் தலைமையில் ஏவப்பட்ட கடைசி ராக்கெட் இதுவாகும். 

நாட்டின் 100-வது செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இந்தியா சாதனை - பாகிஸ்தான் கவலை :

இந்தியாவின் இந்த சாதனை குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உள்ளடக்கிய அனைத்து விண்வெளித் தொழில்நுட்பங்களும், இயல்பான இரட்டை பயன்பாடானது பொதுமக்கள் மற்றும் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் எனவே, இத்தகைய துரதிர்ஷ்டங்கள், இராணுவத் தளர்ச்சியின் உறுதியற்ற தன்மையை கட்டமைப்பதை நோக்கி செலுத்தப்பட வேண்டியது இன்றியமையாததாகும். இத்தகைய முயற்சிகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இராணுவத் திறன்களை வளர்த்தல் என்பது பிராந்திய மூலோபாய ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...